டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
Monday, September 9th, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதற்கமைய மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 490 ஆகும்.
அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
000
Related posts:
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று !
இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மக்களின் அரிசி நுகர்வு குறைந்ததால் கால்நடை தீவனத்திற்கு அரிசி விற்பனை - நுகர்வோர் சேவை அதிகார சபை தீ...
|
|
|


