தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டொரு வாரத்தில் வெளியாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!
Thursday, August 29th, 2024
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால், இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாமென, பொது நிர்வாக அமைச்சிடம் கோரிய போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லையெனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 508 வாக்களிப்பு நிலையங்கள் - சுகாதார ஏற்பாடுகளும் சிறப்பாக ஏற்பாடு!
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் - அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தாக க...
|
|
|


