அமைச்சர் டக்ளஸ் மன்னார் விஜயம் – தேவன்பிட்டி விவசாய காணி தொடர்பில் ஆராய்வு!

Sunday, August 25th, 2024

மன்னருக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மன்னார் மாந்தை மேற்கு தேவன்பிட்டி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 103 குடும்பங்களை சார்ந்தவர்களின் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த அரச காணிகளாக இருந்தவற்றினை யுத்த காலத்திற்கு முன்னர் குறிப்பிட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் பின்னராக இடம்பெற்ற அசாதாரன நிலமைகளால் ஏற்பட்ட இடம்பெயர்வுகளால் மேற்படி காணிகளை உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலமை காணப்பட்டுள்ள நிலையில் தற்போது அக் காணிகளை உரிய முனையில் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து அதனை பெற்றுக் கொள்ளும் முகமாகவே இச் சந்திப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பு மன்னர் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  அலுவலகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: