கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Wednesday, August 21st, 2024

பேருவளையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடந்த மேமாதம் 15 ஆம் திகதி இந்திய கரையோர காவற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களை  விடுவிக்க உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு  உதவுமாறு நேற்று (20) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

000

Related posts:

நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திட்டத்தை இயந்திரங்களைப் பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் – மின்சார இணைப்பின...
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எட...