வெறிநாய்க்கடி நோய் – இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு எச்சரிக்கை!
Thursday, August 15th, 2024
வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
வெறிநாய்க்கடி நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவின்மை காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் அத்துல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.
நாய் கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சமூகமளித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!
மாற்றுத் திறனாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நிவாரணம் - பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு மஹிந்...
அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று ஆரம்பம்!
|
|
|


