வன்டர்சேவின் சுழலில் சுருண்டது இந்தியா – இலங்கை அணிக்க மகத்தான் வெற்றி!

Monday, August 5th, 2024

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் துனித் வெல்லாலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தலா 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் ஜெஃப்ரி வன்டர்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1 – 0 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: