செவ்விளநீர் மரங்களை ஆக்கிரமிக்கும் வெள்ளை ஈக்கள்!
Monday, August 5th, 2024
தெங்கு மற்றும் செவ்விளநீர் உற்பத்திகளில் பரவி வரும் வெள்ளை ஈ பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட என்கார்சிஸ் குவாடலூபே (Encarcis Guadeloupae) அடங்கிய 3 இலட்சம் பொதிகள் இவ்வருடம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தளது.
வெள்ளை ஈ தாக்கத்தால் ஏற்பட்ட சேதம் தற்போது மேல் மாகாணம் மற்றும் வேறு சில பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை ஈ மஞ்சள் நிறத்தில் அதிகம் ஈர்க்கப்படுவதால், தென்னையை விட செவ்விளநீர் உற்பத்திகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.
வெள்ளை ஈ தாக்கத்தால் சேதத்துக்குள்ளான 1,051,323 தென்னை மற்றும் செவ்விளநீர் மரங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
பதவி விலகப்போவதாக தேசிய புகையிலை மற்றும் மதுசார அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினர் எச்சரிக்கை!
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கும் - இலங்கைக்கான ...
நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படும் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!
|
|
|


