பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Thursday, August 1st, 2024
பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பால் மாவுக்கான விலையை ஓரளவு குறைக்க முடியும் என நம்புவதாகவும், விலையை கணக்கிடுவதற்கு நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும்,
நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
இரத்த பரிசோதனைக்கு வரும் அதிகாரிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
மொனிக்கா பின்ட்டோவின் அறிக்கை போலியானது - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ
கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பா காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ளக...
|
|
|


