முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு!
Monday, July 29th, 2024
முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் மூலம் குறித்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஆரம்பம்!
பொலிஸார் விடும் தவறுகளே ஊடகங்களில் செய்தியாகின்றன - அதில் தவறில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அத...
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள...
|
|
|


