இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் – இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Sunday, July 28th, 2024

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 214 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106