பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி அமைச்சு!
Monday, July 8th, 2024
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் நடைபெற்றாலும் இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை (09) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தொழிற்சங்க போராட்டங்களில் ஆசிரியர்கள் இணைந்துகொண்டாலும் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பில் பெப்ரல் அமைப்பு கோரிக்கை!.
சைகை மொழியில் ஒளிபரப்ப கிடைத்தது அனுமதி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு!
விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!
|
|
|
நாட்டில் முழுமையாக சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் - நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெ...
இலங்கையின் விவசாய மேம்பாட்டிற்கு ட்ரோன் தொழில்நுட்பம் - கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்பு - பாக...


