ஜூன் மாத இறுதிக்குள் தேசிய மின்சார கட்டமைப்புடன் 1,000 மெ.வோ. இணைக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Saturday, June 29th, 2024

சூரிய மின் உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட 132 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இந்த ஆண்டின் முதல் 05 மாதங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சூரிய மின் உற்பத்தி மூலம் இம்மாத இறுதிக்குள் 1,000 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் வலைப்பின்னலுடன் இணைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

கூரை சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் 944 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், தரை வழி சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் 156 மெகாவோட் மின்சாரம் இவ்வாறு வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டதாகவும் கூறினார்.

இவ்வருட இறுதிக்குள் கூரை சூரிய மின் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக 1,000 மெகாவோட் மின்சாரத்தை பெற திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

000

Related posts:


ஜனாதிபதியின் விருப்புடன் அமைச்சு பதவியில் மாற்றம் வருமானால் ஏற்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
சுயநிதிப் பொறிமுறையின் கீழ் நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர்...
நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப...