நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் – விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என யாழ்ப்பாணம் போதனாவின் பிரதிப் பணிப்பாளர் ஜமுனானந்தா அறிவுறுத்து!
Friday, June 28th, 2024
நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்
விசர் நாய் கடி தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசக் கடிக்கு தீண்டப்படும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ வேண்டும். சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது.
ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் பெயர் மாற்றம்
இலங்கையில் தினமும் 500 முதல் 6௦௦ தொற்றாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சு !
எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு - இராணுவத் தளபதி தெரி...
|
|
|


