அமைச்சரவையை உடனடியாக மீளமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
Wednesday, September 14th, 2016
உடனடியாக அமைச்சரவையை மீளமைத்து செயற்றிறனற்ற அமைச்சர்களை விலக்கி விடுமாறு ஜனாதிபதியிடம் சிவில் அமைப்புக்களின் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் வசீம் தாஜூதீன், லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிக்கொட ஆகியோர் தொடர்பிலான விசாரணையில் நீதிமுறைகளை துரிதப்படுத்துமாறும் சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன.
பாரத லக்ஸ்மன் கொலை விசாரணையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு,இலங்கையின் நீதித்துறையில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்என்றும் சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
நேற்று ஜனாதிபதியை இந்த குழுக்கள் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழு...
சில அரச நிறுவனங்களால் நாட்டுக்கு ஒரு இலட்சம் கோடி இழப்பு - மத்திய வங்கி ஆளுநர் அதிர்ச்சித்தகவல்!
|
|
|


