தூத்துக்குடியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவித்துத் தருமாறு கைதானவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Monday, June 24th, 2024

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவித்துத் தருமாறு  கைதானவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை விடுத்ததுள்ளர். 

அரேபியன் கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பும் வழியில் தாம் கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடையைச் சேர்ந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் கூறியிருந்தாலும் தூத்துக்குடியில் எவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

இதனிடையே மீன் ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் , பல நாள் படகு உரியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையேயான  சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது படகுகளுக்கான எரிபொருள் விலை தொடர்பாகவும் , ஏற்றுமதியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

வேலணை வைத்தியசாலையை தள வைத்திசாலையாக தரமுயர்த்த வேண்டும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத...
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...
சமூர்த்தி திட்டங்கள் நலிவுற்ற மக்களின் வளமான எதிர்காலத்திற்கானது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள்...
சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வே...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - 15 வருடகால கனவை நனவாக்கிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள்!