கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – ஸ்கந்தபுரம் விவசாய அமைப்பினருக்கு கட்சி நிதியிலிருந்து பதினைநது இலட்சம் நிதி வழங்கிவைப்பு!

Thursday, June 20th, 2024

கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக கட்சி நிதியிலிருந்து 15 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு உறுதியளித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதன் முதல் கட்டமாக 7 இலட்சம் ரூபாய்யை வழங்கியுள்ளார்.

விவசாயம், கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை உற்பத்திகளை விருத்தி செய்து சுய பொருளாதாரத்தில் மக்களை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட விவசாய அமைப்பினரின்  கோரிக்கைக்கு அமைய குறித்த நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியின் பயனாகவே ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், அக்கராயன், கோணாவில், ஆனைவிழுந்தான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த  காணிகளற்ற  குடும்பங்களுக்கு 196 ஏக்கர் கரும்புத் தோட்டக் காணி பகிர்ந்தளிக்கப்பட்டள்ள நிலையில் குறித்த நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வலைப்பாடு மெசியா விளையாட்டு மைதனானத்தின்  புனரமைப்பிற்காகவும் குறித்த பிரதேச இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக  கட்சி நிதியில் இருந்து 7 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக 3 இலட்சம்  ரூபாயினை அமைச்சர், தனது கட்சி நிதியிலிருந்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

யாழ். போதனா வைத்தியசாலை விவகாரங்கள் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜய...
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கல...

அமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி ம...
600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் - மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர...
அம்பாறை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களுடன் சந்திப்பு!