இந்தியாவிலிருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
Monday, June 17th, 2024
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து 12,144 பேர் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானியாவில் இருந்து 3,475 பேரும், சீனாவில் இருந்து 3,095 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,272 பேரும் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கலால் திணக்களத்தின் வருமானம் 400% உயர்வு!
அத்தியாவசிய பொருட்களை சாதாரண விலையில் விநியோகிக்க நடவடிக்கை - அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்பட...
|
|
|


