வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை!
Sunday, June 16th, 2024
யாழ்ப்பாணம் வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில காணிகள் குறித்த பகுதி மக்களின் காணிகள் என்பதால் அவற்றுக்கு மாற்றிடாக 1980 ஆம் ஆண்டுகளில் சுதந்திரபுரம் எனும் கிராமம் உருவாக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட்டன.
குறித்த காணியில் உள்ள ஆலயம் மற்றும் தற்போதும் காணி இல்லாமல் இருப்பவர்கள் தமது பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை வரவழைத்தனர்.
குறித்த மக்களை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர், பிரதேசசெயலகம் ஊடாக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதுடன் கோவில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்று தர முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
வங்கியில் மூலதன சிக்கல்கள் இருப்பின் அதனைத் தீர்த்துவைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு - டக்ளஸ்...
ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - நீர்வேலி கரந்தன் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!
|
|
|


