நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Sunday, June 9th, 2024
நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுகர்வோர் அதிகார சபையில் நாடு முழுவதும் 277 பேர் மாத்திரமே காணப்படுவதாகவும், அத்தொகை போதுமானது அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் எரிபொருள் உட்பட பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் அதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுக்கும்புற, வாய்மொழி மூலமாகக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒக்டோபரில் உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல் -கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து சுற்றறிக்கையை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி!
|
|
|


