மாங்குளத்தில் கோர விபத்து : தாய் பலி!

Wednesday, September 14th, 2016

மாங்குளம் – மல்லாவி பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 4ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் ஆவர். உயிரிழந்தவரின் மகனான 14 வயதுடைய இரவிக்குமார் சங்கீதன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-01-55137a0c9f812975b4a13b490d745ff97db954a33e43a98592fc0cfb4b92f343-V

Related posts:

வெளிநாட்டு வேலைக்காக 4 மாதத்தில் ஒரு இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்ன...
அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அ...