உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரல்!
Wednesday, June 5th, 2024
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன.
இன்று (05) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலைப் பரீட்சாத்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தகுதியான பாடசாலை அதிபர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை முடிவு!
குடாநாட்டில் மூவாயிரம் மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள் அமைக்க இந்தியா இலங்கை உடன்பாடு!
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் – வானிலை அவதான நிலைமை தெரிவிப்பு!
|
|
|
இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் - மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்...
வடக்கு - கிழக்கில் சனிக்கிழமை வரை தொடர் மழை - யாழ் பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!
நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் சரியான வகையில் மக்களுக்குக் கிடைப்பதற்கு அரச அதிகா...


