விடுதலை வித்துக்கள் தினம் இன்று – மரணித்த தோழர்களை அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நினைவு கூர்ந்து அஞ்சலித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Wednesday, June 5th, 2024

விடுதலை வித்துக்கள் தினம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜநயானகக் கட்சியால் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் வித்தாகிப் போன தோழர்கள் உட்பட ஈழப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து மரணித்த அனைத்து இயக்கங்களின் போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் விடுதலை வித்துக்கள் தினமான இன்றைய நாளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நினைவு கூரப்பட்டு அஞ்சலி  செலுத்தப்பட்டது

குறிப்பாக  பொன் சிவகுமாரனது நினைவு நாளான இன்றைய நாளில் ஒவ்வொரு வருடமும் குறித்த விடுதலை வித்துக்கள் தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது

ஈழப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த முதலாவது போராளியான தியாகி பொன். சிவகுமாரின் 50 ஆவது நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை எதிர்வரும் ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் நினைவுரப்படுவர் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் – தோழர் கீ.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  - நாடாளுமன...
கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? - நாடாளும்றில் டக்ளஸ் எம்.ப...
கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகி...

அதிகரித்து வரும் வாகன விபத்துக் குறித்து அவதானம் செலுத்தவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியு...
அரச ஒடுக்கு முறையைவிட அமெரிக்க அடக்குமுறை மக்களை கூண்டோடு அழித்துவிடும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தாருங்கள் - தேவன்பிட்டி மாதர் அமைப்பின...