ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவு தினத்தினம் இன்று – நினைவுகூரும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் கலந்து சிறப்பிப்பு!
Wednesday, June 5th, 2024
ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈகச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழ் மக்களின் கெளரவமான அரசியல் உரிமைகளுடன் வாழ்விற்காக உழைத்து உயிர் தியாகம் செய்த தியாகி பொன். சிவகுமாரனின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மறுவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வு, நித்தியானந்தன், சி.தவராசா, கோவை நந்தன் ஆகியோரின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் வாக்களியுங்கள் - டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்!
பொழுதுபோக்குக்காக கதைக்கும் அரசியலை நான் செய்வதில்லை - நாட்டின் நிலையை உணர்ந்தும் செயற்படுவது அவசிய...
|
|
|
வடக்கு - கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் - பிரதமரிடம் ...
யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் த...
பொன்னான வாய்ப்பு கிடைத்தது - எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் – இதுவே இன்றைய சாபக்க...


