வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!
Monday, April 29th, 2024
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4,532 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 1,936 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கல்வித்துறை தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!
சிறுவர் தினத்தை முன்னிட்டு பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வங்கிக் கணக்க...
நிதியமைச்சுக்கு கீழுள்ள நிறுவனங்களுக்கு பணியாளர்களை இணைத்துக் கொள்ளும் முறைமையில் மாற்றம் - நிதி இரா...
|
|
|


