அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் – வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் சாவகச்சேரியில் கவனயீர்ப்பு போராட்டம்!
Tuesday, April 9th, 2024
அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாவகச்சேரியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
சாவகச்சேரி பேருந்து தரிப்பு நிலையம் முன்பாக இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் “அரிசியின் விலையேற்றத்தால் பசியில் வாடுகிறோம்,
நிறுத்து நிறுத்து வளச் சுரண்டல்களை நிறுத்து ,பொருளாதார சுமையைக் குறை, ஏழையின் வயிற்றில் அடிக்காதே,பட்டினிச் சாவு வேண்டாம்,பிள்ளைகளை பசியால் வாட்டாதே ” உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மிகவேகமாக பரவி வரும் ஆட்கொல்லி நோய் – மக்களுக்கு எச்சரிக்கை!
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!
வடக்கு - கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் - புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை...
|
|
|


