வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மகள் படுகாயம்

Monday, March 28th, 2016

இளவாலை பெரியவிளான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 27-03-2016) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப்  பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த திரவியம் அகிலேஸ்வரன் (வயது -36) என்பவரே  உயிரிழந்தவராவார்.அவரது மகளான அ .அகிலா (வயது -14) என்ற சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

நெஞ்சுவலியால் துடித்த மகளை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றபோதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106