உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்த போதிலும், மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்காதுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2024


தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தாதியர் பற்றாக்குறை காரணமாக முழுமைான சேவையினை மக்களுக்கு வழங்கமுடியாது இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய  உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அண்ணளவாக 1800 தாதியர்களுக்கான தேவை இருக்கின்ற நிலையில் தற்போது சுமார் 650 தாதியர்கள் மாத்திரமே சேவையாற்றி வருகின்றனர்.

எனவே முடிந்தளவு தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதிகளை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற ஆலோசனை குழுவின் கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

Related posts:

பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!