பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட முடியாது – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவு!

Tuesday, March 26th, 2024

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில் பணியாற்ற இடமளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் சொந்த ஊரில் அல்லது அவர்களது மனைவியரின் சொந்த ஊரிலும் கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள்முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் தங்களது ஊரில், மிக அருகாமையில் அல்லது மனைவியின் ஊரில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதற்காக விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளதுடன் சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!
புதிய அமைச்சரவை, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து அரச தலைவரும் பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப...
யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளாமல் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர...

செம்பியன்பற்று விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைகள் வழங்கிவைப்பு!
புத்தர் சிலை சேதப்படுத்திய விசாரணையை முறையாக மேற்கொண்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவை தட...
நாங்கள் ராஜபக்சர்களை இரகசியமாக சந்திக்கவில்லை - ஒளித்தும் போகவில்லை - பிழைகளை மூடி மறைக்க பொய்களை அவ...