கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக பரிணமிக்கும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, March 23rd, 2024

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் எதிர்காலத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றம்பெறும் வாய்ப்புகள் வரலாம் என நம்பிக்கை வெளிப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி அறிவியல்நகர் பெறியியல் பீடம் உருவாகியதன் பழைய நினைவுகளையும் நினைவு கூர்ந்துள்ளார்

கிளிநொச்சி அறிவியல் நகர் பொறியியல் துறையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில்  பிரதம விருந்தினராகக் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார் ..

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

யாழ் பல்கலைகழகத்திற்கு ஒரு பொறியியல் துறை தேவையென பேராசிரியர் துரைராஜாவின் முப்பத்தி மூன்று வருட கனவு நிறைவு  பெற்று இன்று பத்து வருடங்கள் கடந்துவிட்டன்.

அதுமட்டுமல்லாது குறித்த வளாகம்  பல ஆயிரம் மாணவர்களை பிரசவித்துவிட்டது

மேலும் இன்று  யாழ் பல்கலையின் வளாகமாக உள்ள கிளிநொச்சி பொறியியல் பீடம் அதனுடன் இணைந்த தொழில் நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடம்  எதிர்காலத்தில்

கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்புடத்தக்கது.
…….

Related posts:

இலட்சியத் தேரின் வடம்பிடிக்க மக்கள் எழுந்துவர வேண்டும் - புத்தாண்டுச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
குறித்த நபருக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என ஈ.பி.டி.பிக்கு பணிக்க எவராலும் முடியாது – ரணிலே எமது தெ...
ஈ.பி.டி.பியின் அரசியல் பலம்  வலுப்பெறும்போது தமிழ் மக்களின் அபிலாசைகளு விரைவில் ஈடேறும் - செயலாளர் ந...