இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

Friday, March 22nd, 2024

நாட்டில் இடம்பெறும் இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, பொதிகள் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான குறுஞ்செய்தி வருவதாக தனது எச்சரிக்கை செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தங்கள் விபரங்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட அறிவிப்பை இலங்கை வங்கி தமது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் - சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதா...
கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத...
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் தேயிலை மற்றும் மரக்கறி...