யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு – எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் அங்குரார்பணம்!
Friday, March 15th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.
உணவுப் பண்டங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ அனுமதி பெற இதுவரை வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், இதற்கான அலகு யாழ்ப்பாணத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
இதனை எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தொற்று சமூக பரவலாவதை தடுக்க நடவடிக்கை - இராணுவ தளபதி தெரிவிப்பு!
பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை - வர்த்தக அமைச்சர் அறி...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவி...
|
|
|


