இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழை – 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
Thursday, March 14th, 2024
இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 32 ஆக அதிரித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்ததுடன் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
இதில் வீதிகள், 1,500 க்கும் மேற்பட்ட வீடுகள், மற்றும் வழிபாட்டு தலங்கள் நாசமாகியுள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 5 பகுதிகளில் பேரிடருக்கான நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 70,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதனிடையே காணாமல்போன பலரை தேடும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
24,000 கிலோ ஆப்பிள் தொகையை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு வழங்க நடவடிக்கை!
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது - ஈ.பி.டி.பி தெரிவி...
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமீரகத்தை நினைத்த நேரத்தில் தாக்குவோம் - ஈரான்!
|
|
|


