வடக்கின் போரை வெற்றிகொண்டது பரியோவான் கல்லூரி!
Saturday, March 9th, 2024
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இரு அணிகளும் மிகவும் உட்சாகமாக போட்டியில் பங்குபற்றியிருந்ததுடன் இம்முறையும் ஏராளமானோர் இப் போட்டியை கண்டுகளிப்பதற்காக யாழ் மத்திய கல்லூரிக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வங்கத்திற்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்து - பிரபல சுழற்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிக நியமனம்!
|
|
|


