22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Saturday, March 9th, 2024
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நலன்புரி முகாமில் வசிக்கும் மக்களை வெளியேற்றவில்லை யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு!
இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிப்பு!
பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அதி...
|
|
|


