ஜூன்முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Sunday, March 3rd, 2024
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.
அவ்வாறு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், சட்டத்தின் பிரகாரம் குறித்த நபர்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்களுடன் அரசிதழ் இன்று!
போக்குவரத்து சீரின்மை - கால தாமதமாக வருகை தரும் மாணவருக்கு சலுகை வழங்க வேண்டும் - அனைத்து பாடசாலை அத...
நல்லூர் பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது – ஈ.பி.டி.ப...
|
|
|


