மின் கட்டண திருத்தம் – யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Thursday, February 22nd, 2024
மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி மின்சார சபையால் கிடைக்கும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், இப்புதிய திருத்தத்தில் முற்றாக நீக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாளை பிற்பகல் 2 மணிவரை அவகாசம்: இல்லையேல் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர்!
நிறைகளை உறுதி செய்ய சந்தைக்கு வெளியே தராசு - சாவகச்சேரி நகரசபை தீர்மானம்!
வேலணை பிரதேச சபை மீது காழ்ப்புணர்ச்சிகளால் அவதூறுகள் பரப்பப்படுவதை ஏற்கமுடியாது – கூட்டடமைப்பினரின் ...
|
|
|


