போதைப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!.
Monday, February 12th, 2024
நாட்டில் தற்போது போதைப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர சோதனை நடவடிக்கையால் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
போக்குவரத்து சபைக்கு 1250 புதிய பஸ்கள் கொள்வனவு!
அரைகுறையாக காணப்படும் நீர்பாசன வாய்க்கால்கள் - பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்!
வெளியானது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி!
|
|
|


