இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – இந்திய மீனவர்கள் 19 பேர் கைது !
Thursday, February 8th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அனைத்து வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராய விசேட பிரிவு ஸ்தாபிக்க நடவடிக்கை - அமைச்சர் திலும் அமுனுகம ...
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் - நுகர்வோர்களிடம் லிட்ரோ நிறுவனத்தின் த...
கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு - இலங்கை மனித உரிமைகள் ஆ...
|
|
|


