இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – இலங்கை மின்சார சபையின் 17 பணியாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்!
Friday, January 19th, 2024
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 17 பணியாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக, அந்த காரியாலய வளாகத்தில் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் அண்மையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நபர்!
குற்றங்களைக் கட்டுப்படுத்த மறைகாணி பொருத்துங்கள் - பொலிஸார் கோரிக்கை!
இலங்கையின் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள மினுவாங்கொட - 8000 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு - இ...
|
|
|


