உடல் உறுப்புக்களை தானம் செய்ய முனவாருங்கள் – பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை!
Thursday, January 11th, 2024
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் நோயாளிகளின் அத்தியாவசியமான உடல் பாகங்களை தானம் செய்வதனால் அவற்றை வேறு நபர்களுக்கு பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவொன்று பேராதனை வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நோய் நிலைமைகளினால் உயிரிழப்போரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.
கல்லீரலைக் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் தற்பொழுது பேராதனை வைத்தியசாலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புகையிரத திணைக்களத்தின் சேவையை வினைத்துறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!
அடிப்படை வசதிகள் இன்றி வெளிமாவட்ட அரச பணியாளர்கள் - அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு!
மீண்டும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம்? - வெளியாகியுள்ள எச்சரிக்கை கடிதம்!
|
|
|


