இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு!
Thursday, January 11th, 2024
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று(10) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, பிரித்தானிய இளவரசி ஹேன் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
அத்துடன், பிரித்தானிய இளவரசியின் கணவரான வைஸ் அட்மிரல் சேர்.டிம்.லோரன்ஸும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தழிழ்நாட்டில் உள்ள 2500 இலங்கை அகதிகள் நாடுதிரும்ப விருப்பம்!
மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் சர்வகட்சி மாநாடு!
மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அற...
|
|
|


