சேவைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் ஊழியர்களை பணி இடைநிறுத்துமாறு துறைசார் அமைச்சர் அதிரடி உத்தரவு!
Sunday, January 7th, 2024
……..
மின்சார சபையின் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
மின்சார சபையின் சேவைகளை சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இதன்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யானைக்கால் நோய் அற்ற நாடாக இலங்கை பிரகடனம்!
சந்திகளில் குழுமி நின்றால் ஆபத்து!
மேல் மாகாணத்திலிருந்து வெளியேற தடை - இராணுவத்தளபதி அறிவிப்பு!
|
|
|


