மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
Friday, January 5th, 2024
………..
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது
எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது. என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் வலியுறுத்தினார்.
மேலும் மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, தற்போது மேல்மாகாணத்திற்கு மட்டுமே நிதி சுதந்திரம் காணப்படுவதாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
Related posts:
பல்கலை மாணவர்களின் கொலை வழக்கினை திசை திருப்ப முயற்சி! நீதிபதியின் விசேட உத்தரவு!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் மையம் - அமைச்சர் பிரசன்ன ர...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு - உலகில் சுற்றுலாவுக்கு பொருத்தமான 5 நாடுகளில் இலங்கையும் உள்...
|
|
|


