மாலி தாக்குதலில் 3 படையினர் பலி!
Saturday, September 10th, 2016
மாலியில் உள்ள போனியின் மத்திய நகரில் நடைபெற்ற திடீர் தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில், போனியில் உள்ள மத்திய நகரை ஜிஹாதிகள் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இருவர் காயம் அடைந்துள்ளனர். மாலியின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில், ஐ.நாவின் அமைதி படையினரின் இருப்பு உள்ள போதும் இஸ்லாமியவாத குழுக்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டில், மாலியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை பிரிவினைவாதிகள் மற்றும் ஜிஹாதிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related posts:
மியன்மாரில் கோபி அன்னானுக்கு கடும் எதிர்ப்பு!
ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகல்!
இலங்கையில் அரசியல் குழப்பம் - தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறி...
|
|
|


