டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் – வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிப்பு!
Monday, December 25th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய மதியம் வரையான நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு டெங்கு காய்ச்சல் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
சாரதி உரிமம் பெறுவதற்கு இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்!
கையிருப்பு எதுவுமில்லை - கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து ஈரான் அரசு திட்டவட்டம்!……
|
|
|


