வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணிலுக்கு வடக்கு கடற்றொழிலாளர் சார்பில் நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, December 20th, 2023

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கடற்றொழில் தினத்தினை இன்று கடற்றொழில் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் கொண்டாடியுள்ளனர்.

கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன் பாதீட்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு என ரூபாய் 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நான் இந்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடமாகாண கடற்றொழிலாளர் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

000

Related posts:

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுக...
மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணி விவகாரம் - தீர்வு காண அமைச்சர் டக்ளஸ...

மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்ற...
வடக்கு மக்கள் தங்களது விவசாய நிலங்களுடன்  கடல் வளத்தையும் இழந்து நிற்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்...
நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பில் எனது கோரிக்கை நிறைவேற்றப்படுவதையிட்டு மனமார்ந்த நன்றிகள்!