காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு !
Tuesday, December 5th, 2023
காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து உடனடியானதும் விரிவானதும் மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது.
இதேநேரம் முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டுவதற்கும் கட்டர் அரசாங்கம் தனது முயற்சிகளை தொடரும் என கட்டர் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எகிப்து, அமெரிக்காவின் ஆதரவோடு கற்றல் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்தம் 240 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 80 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வழிவகுத்தது.
ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறியதாக இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியல் பழிவாங்கல்கள் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து அம்பாறையிலும் ரோந்து நடவடிக்கை!
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


