நாட்டில் பல வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க சிவப்பு அறிவித்தல் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு!
Monday, December 4th, 2023
நாட்டில் பல வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முருத்தெட்டுவ ஆனந்த தேரரின் அபயராம விகாரையில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை துண்டிக்க வந்ததாகவும் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –
இன்றைய காலத்தில் நீர் மின் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது. மின்சார சபைக்கு கோடி கோடியாக இலாபம் கிடைத்து வருகிறது.
ஆனால் நாட்டில் 50 இலட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன, அது நியாயமா?
சுமார் ஐந்து இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான தகவல்கள் உள்ளன.” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் இல்லை - கல்விச் சமூகம்!
மரண தண்டனை - மக்களது வாக்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம்!
மத்திய கிழக்கில் பதற்றம் - பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக 03 விசேட குழுக்களை ...
|
|
|


