பருத்தித்துறை பிரதான வீதியில் கோர விபத்து – இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே பலி!
Saturday, December 2nd, 2023
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்தார்.
விற்பனை நிறுவன வாகனமும் மோட்டார் வண்டியும் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அலுவலகம் புகுந்து நல்லூர் பிரதேச சபையின் அதிகாரியைத் தாக்கிய ஆசாமி மீது கடும் நடவடிக்கை வேண்டும்: ய...
யாழில் கோர விபத்து – இரு மாணவர்களின் நிலை கவலைக்கிடம்!
கிளிநொச்சி சட்டவிரோத மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
|
|
|


