வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆராய்வு!
Friday, December 1st, 2023
வடக்கு மக்களுக்கு 20 மின் வலுக்கொண்ட (சூரிய சக்தி) சோலர் பொருத்திய 50 இலட்சம் பெறுமதியான 25 ஆயிரம் வீடுகள் வழங்க நடவடிக்கை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக வீடுகள் அற்றவர்களுக்கு என வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் ரூபா பொறுமதியான 20 மின் வலு சூரியஒளி சக்திகொண்ட சோலர் பொருத்திய 25 ஆயிரம் வீடுகள் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் (01.12.2023) இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் மற்றும் பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .
Related posts:
சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – ஊடக சந்திப்பில் அமைச்சர...
சந்தர்ப்பங்கள் விரைவாக பயன்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
|
|
|


